|

The hypocrisy of the Dravidian leaders could be found in such funcions!
The caste-twist has already been given or the caste-conflict of the students brewing has already been politicized.
Under such circumstances, there is no meaning inpoliticians blaming each other.
The Tamilnadu students may be left alone, so that they could concentrate in their studies, future and welfare.
The politicians need not indulge in any form of direct or indirect provocation.
20 சட்டக் கல்லூரி மாணவர்களை பிடிக்க 25 தனிப் படைகள்
சனிக்கிழமை, நவம்பர் 15, 2008 |
|
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்ட மாணவர்களை கைது செய்ய 25 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகள் நெல்லை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளன.
சட்டக் கல்லூரியில் கடந்த 12ம் தேதி 2 பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்ய 25 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகர போலீஸ் கமிஷனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன், தன்னுடன் புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கமிஷனர் விஸ்வநாதனின் நேரடி மேற்பார்வையில் இந்தப் படைகளை அமைத்துள்ளார்.
மேலும் 3 துணைக் கமிஷனர்கள், 6 உதவி கமிஷனர்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அடங்கிய இந்தப் படையினர் நேற்றிரவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சில அரசியல்வாதிகள் அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட மாணவர்களை இன்று இரவுக்குள் கைது செய்யுமாறு கமிஷ்னர் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்முறை தொடர்பாக டிவி, பத்திரிகைகளில் வந்த காட்சிகளை வைத்து இந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரியில் பயிலும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்தியும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரங்களை அறியப்பட்டுள்ளன.
இந்த மாணவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளனவா என்ற ஆய்வும் நடக்கிறது.
மதுரை வாலிபர் கைது:
இந்நிலையில் மதுரையை சேர்ந்த சிவகதிரவன் என்ற வாலிபர் இன்று தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
மருத்துவமனையிலிருந்து சிறை வார்டுக்கு…:
இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
சித்திரைச்செல்வன் என்ற மாணவரும், இந்தக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மீதும் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சித்திரைச் செல்வனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்குள்ள கைதிகள் வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தாக்குதலில் சித்திரைச் செல்வன் தவிர பாரதிக் கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகியோரும் படுகாயமடைந்ததுள்ளது நினைவுகூறத்தக்கது.
|

PAYING HOMAGE: Chief Minister M. Karunanidhi at the Muthuramalinga Thevar memorial at Pasumpon in Ramanathapuram.
Note here the sincerity of the atheist!
How reverentially, folding hands, he pays his devotion, respect and worship! Ans what about others? Oh, once Karunanidhi, Jayalalitha and other bigwigs follow, naturally, all would follow!
Really, it is intriguing to read that the TN government has deployed 25 “seperate forces" to nap 20 law college students!
Having failured in the case of nurturing the hatred among thr student community through the Dravidian caste-hate thdeology and politics, why this type of over-reactive measures, as if they are going to catch some criminals and so on.
No doubt, the attack of students on one student, even after falling down fainting has been atrocious.
For such morbid-mentality, they have to be punished for the crime.
But, the politicians cannot get away with their dirty games played with the symbols of caste-leaders!
Now, film on Chennai"s law college violence
http://www.hindu.com/thehindu/holnus/009200811151805.htm
Chennai (IANS): The recent violence in the Dr Ambedkar Law College here will be the subject of a forthcoming Tamil movie, a film producer said Saturday.
“‘Suriyan Sattakkalloori" has the message that no one is above the law or should break it. Some of the incidents that attracted the media"s attention during the past two days will be recreated in the film," its producer Siva Shakthi Pandian told IANS.
Featuring Ghajini, daughter of producer Khaja Mohiuddin, the film will be directed by Pavan, a press statement said.
The film will also be the debut of new find Mithra, it added.
Note the sadist psyche. When a student was falling, falling after severe beating, the media persons were virtually shooting him down without any sympathy or remorse, as he was obviously interested in shooting him down.
And these media persons blame police! |
|
Posted on November 17th, 2008
சட்டக் கல்லூரி வன்முறை: தூண்டி விட்ட முக்கியப் புள்ளி சிக்குகிறார்
திங்கள்கிழமை, நவம்பர் 17, 2008
http://thatstamil.oneindia.in/news/2008/11/17/tn-vip-politician-will-be-arrested -soon-in-law-college-viole.html
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்களை தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய முக்கிய அரசியல் புள்ளி விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த பயங்கர வன்முறைச் சம்பவம் தொடர்பாக எழுந்த கடும் கண்டனத்தைத் தொடர்ந்து காவல்துறை தற்போது சுறுசுறுப்புடன் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து வருகிறது.
இதுவரை 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மற்றவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சென்னை அண்ணா நகர் பாடிக்குப்பத்தைச் சேர்ந்த இளமுகில், மதுராந்தகம் பிரேம்குமார், உளுந்தூர்பேட்டை இளையராஜா ஆகியோர் நேற்று கைதானவர்கள்.
இவர்களும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மதுரை சிவகதிரவன், ராஜா, பிரேம்நாத் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி பரமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மேலும் 15 மாணவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களில் சிலர் முக்கியப் புள்ளிகளின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவர்களை கலவரத்திற்குத் தூண்டியும், ஆயுதங்கள் வழங்கியும் பின்னணியில் இருந்த முக்கிய அரசியல் புள்ளி குறித்த தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவரும் கைது செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைத் திட்டம் பிறந்த இடம் கல்லூரி விடுதி என்பதால் அதில் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று சட்டக் கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Posted on November 17th, 2008
Whether Karunanidhi accuses VAIKO annd Jayalalitha and vioice versa, the sufferers are going to be the students only.
The more the polituicians talk rhetotic, the more would be the sentiments, emotions and backlash from the respective groups.
Their speech would amount to adding fuel to the fire only.
Posted on November 17th, 2008
Political parties choose candiates as per Majority caste.
SC/ST Seats must have been reserved by rotation.
Women reservation for Assembly and Parliament is opposed by mainly casteist parties.
Another news report says that a Bahujan samaj Leader Rajappa visited Chennai GH for seeing a Relative under treatment, And students from law college attacked him and his vehicle.
Reservation by Caste must be removed.
No application form should have caste column
Posted on November 17th, 2008
So long as skills / knowledge are ignored, in preference to caste, such degradation is bound to happen !
Hope the (mis)-rulers will realize the folly sooner than later !
Posted on November 17th, 2008
சண்டையை தூண்டி விட்டேனோ?-கருணாநிதி மீது அவதூறு வழக்கு-ஜெ
திங்கள்கிழமை, நவம்பர் 17, 2008
http://thatstamil.oneindia.in/news/2008/11/17/tn-jaya-warns-karunanidhi-of-defam ation-case.html
சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நான் தான் மோதலைத் தூண்டிவிட்டேன் என்று என் மீது பழி சுமத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள முதல்வர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி, சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களின் இரு சாரரையும் நான் தூண்டிவிட்டு சண்டை போடச் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது காவல் துறையினரின் கண் முன்பு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல் துறையினரின் வேடிக்கைப் பார்க்கும் போக்கைக் கண்டித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் இந்தச் செயலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், காவல் துறையின் மெத்தனத்திற்கு என்ன காரணம்? கல்லூரி முதல்வர் எங்கே தவறியிருக்கிறார்? இதனுடைய மொத்த விளைவு என்ன? மாணவர்கள் மத்தியிலே என்ன புகைந்திருக்கிறது? என்பதையெல்லாம் ஆய்ந்து அறிக்கை அளிக்க திமுக அரசால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோதல் குறித்து வேறு ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு முதல்வர் இது போன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கலாமா?
நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பொருள் குறித்து முதல்வர் கருணாநிதி நீதிமன்றத்திற்கு வெளியே கோயம்புத்தூரில் பேட்டி அளித்திருப்பதன் மூலம், விசாரணை ஆணையத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீதிபதிக்கு அறிவுறுத்துகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற பேட்டி நீதிமன்றத்தையும், புலனாய்வு அமைப்பையும் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல், வழக்கையே திசை திருப்புவதாக அமைந்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தேவையில்லாமல் என் மீது வீண்பழி சுமத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள முதல்வர் கருணாநிதியின் மீது நான் அவதூறு வழக்கு தொடருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.