Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Blogs Spotlight Videos Movies Cartoon Photos Submit Media Space  Feed Directory 



Profile :

I am a freelancer and researcher interested in the ancient Indian history and its impact on the current events. The Indians have been subjected to coolie-mentality that works even today. Though, they earn, they are controlled by the factors of ego, selfishness and other facts and thus they compromise, dilute or even sacrifice their religion, culture, heritage, tradition and civilization. The racial interpretation of Indian history has played havoc and I am trying to analyse it critically.

Content Created :

Blogs Posted :293
Articles Posted:1
Videos Uploaded :0
Albums Uploaded :0

Member Since: 21-10-2007
Palaniappan has no friends.
Previous
    
Next
“Writing poetry on Dog?’: Jayalalitha condemns Karunanidhi!
Published on August 26th, 2008 In Uncategorized |  Views 344

 

“Writing poetry on Dog?": Jayalalitha condemns Karunanidhi!

‘நாய் கவிதை எழுதிக் கொண்டிருப்பதா?" : முதல்வருக்கு ஜெ., கண்டனம்

ஆகஸ்ட் 26,2008,00:00  IST

 
 
 

 

சென்னை : “அனைத்துப் பொருள்களும் தங்குதடையின்றி மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு என்பதை உணர்ந்து, பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ஒரு வாரமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைச் செயலர், “டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் மின் பற்றாக்குறையே" என தெரிவித்துள்ளார்.

மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ, “ஜெனரேட்டர்களை உபயோகியுங்கள்" எனக் கூறுகிறார். இருவரது கூற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இனி தமிழகத்தில் தொழில் வளம் என்பது பகல் கனவாகிவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் வழக்கத்திற்கு அதிகமாக டீசலை உபயோகித்து வருவதால், வழக்கமான டீசல் ஒதுக்கீட்டை அவர்களுக்கு அளித்துவிட்டு, அதற்கு மேல் தேவைப்படும் டீசலுக்கு சந்தை விலையை நிர்ணயிக்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரிமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையளர்கள் புகார் கூறுகின்றனர். இதுபோன்ற முயற்சிகளில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டால், மேலும் விலைவாசி உயரும்; ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர். கடந்த முறை பெட்ரோலியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ஜூன் 30ம்தேதி கருணாநிதி எழுதிய கடிதம், ஜூலை 13ம் தேதி தான் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தன. பிரச்னை முடிந்த பிறகு தான் கருணாநிதியின் கடிதம் பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கிடைத்திருக்கிறது.

இந்த முறை, தலைமைச் செயலரை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவிட்டு, “நாய்க் கவிதை, திமிங்கலக் கவிதை" எழுதிக்கொண்டிருக்கிறார். மின்சாரத் துறை அமைச்சரோ, “பூனைக்கு மணி கட்டும்" வேலையில் இறங்கியிருக்கிறார். அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் தங்குதடையின்றி மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், பெட்ரோலியப் பொருள்களின் விலையை மறைமுகமாக உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

While Jayalalitha is criticising for the price-rise of essential commodities, non-availability of diesel, power-cut etc., awards are announced for the involved:

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி

பெரியார் - அண்ணா - கலைஞர் - புரட்சிக்கவிஞர்
விருதுகளை முறையே பெற்ற கலைஞர், ஆர்க்காடு வீராசாமி,
தளபதி மு.க. ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு

தாய்க் கழகத்தின் பாராட்டுகள்!

சுயமரியாதை உலகு அமைய அச்சாரப் பாராட்டு

திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கை

http://files.periyar.org.in/viduthalai/20080825/news02.html

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி விருதுகள் பெறும் தி.மு.க. தலைவர் மற்றும் முன்னணியினருக்கு தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:-

இந்த செப்டம்பர் 15. அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழா ஆண்டு ஆகும்.

As they have been carrying out the duties of their leaders and also the left-out-ones, they may not be having time to concentrate in other activities.

  Share      Print


4 Responses to ““Writing poetry on Dog?’: Jayalalitha condemns Karunanidhi!”
    1. MNachiappan Says:
    Posted on August 27th, 2008

    Now, he has come heavily on Nedumaran as follows:

    விடுதலைப் போர் நாயகராம்
    விருதுநகர் மாவீரர் காமராஜரின்
    விசுவாசமிக்க சீடர் என்று
    விரிவுரை பல நிகழ்த்தி பின்னர்
    வேறு கொடி பிடிப்பேன் என்று அவர்
    விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்
    அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
    கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்
    மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும், சொர்க்கமென்றும்
    முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட
    எட்டப்பன்
    குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
    குறுக்கு சுவர் கட்டி தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
    தவிக்க விட்டு கடல் நடுவே அவரை
    தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்
    வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
    குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி
    தரணிதனில் பல புராணங்கள் இருக்க
    தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
    அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை தன் கட்டுரைக்கு
    விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பதுதான் பெரும் விந்தை
    சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை
    கூராக்கவே இயலாத மூளையில் விஷம் ஒரு மொந்தை

    However, if anybody wants to compose a poem on him, it is possible, as he - of course others of DMK tried to kill Indira Gandhi, but he sang a song on her. It was Nedumaran, who protected her at Madurai Railway station, when the DMK hooligans attacked her with stones and weapons.

      Share    Print

    2. MNachiappan Says:
    Posted on August 27th, 2008

    Nedumaran has given a suitable reply to Karunanidhi as follows:

    சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை நெடுமாறனுக்கு முதல்வர் கவிதையில் பதிலடி
    http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=3337&cls=row3&nc at=TN

    ஆகஸ்ட் 27,2008,00:00 IST

    சென்னை: “சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை’ என பழ.நெடுமாறனை, கடுமையாக கண்டித்து முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரையில், “ராமாயணத்தில் தசரதன் தனது காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே, தனது மகனை மன்னராக பட்டாபிஷேகம் செய்ய முற்பட்டார். ஆனால், கருணாநிதி முதல்வர் பதவியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்’ என்ற தொணியில் விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து “ஆழ்வார்கள் புராணம்’ என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி நேற்று கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை வருமாறு:விடுதலைப் போர் நாயகராம்விருதுநகர் மாவீரர் காமராஜரின்விசுவாசமிக்க சீடர் என்றுவிரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்வேறு கொடி பிடிப்பேன் என்று- அவர்விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!அண்ணாவின் அணி வகுப்பில் நானும் ஒருவன் என நவின்றுகண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

    மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும்சொர்க்கமென்றும்முக ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப் பன்! குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்ககுறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப்பயண மென; தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலேகுத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

    தரணிதனில் பல புராணங்கள் இருக்க தசரதன் புராணத்தில் இவர் இறங்கி அவன் காதோ ரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்குவிதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பது தான் பெரும் விந்தை!சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!கூராக்கவே இயலாத மூளையில் விஷம்ஒரு மொந்தை!இவ்வாறு அந்தக் கவிதையில் கூறப்பட்டுள்ளது.

    He has pointed out that “the thinking has been infected with fuss that cannot be cured”.

    Earlier, Nedumaran commenred on Karunanidhi as follows: “Dasaratha was ready to crown his son, the moment he saw a grey hair near his ear, but Karunanidhi has been sticking to the chair even at his ripe age.”

    For this only, Karunanidhi wrote gthe above poem.

    But, now Nedumaran has responded to him.

      Share    Print

    3. brahmallahchrist Says:
    Posted on August 28th, 2008

    Why this old-man has not bothered about the killing of that old-man?

    Oh, OK, that man was the right old-man in the wrong party, just like Vajpayi!

      Share    Print

    4. Ezhavendan Says:
    Posted on September 11th, 2008

    பெரியார் - அண்ணா - கலைஞர் - புரட்சிக்கவிஞர்
    விருதுகளை முறையே பெற்ற கலைஞர், ஆர்க்காடு வீராசாமி,
    தளபதி மு.க. ஸ்டாலின், துரைமுருகன் - thus they received the titles.

    Then who will receive the awards of கலைஞர், ஆர்க்காடு வீராசாமி,
    தளபதி மு.க. ஸ்டாலின், துரைமுருகன் and others?

    Perhaps, one has to write / compose poem like a dog to bag awards and rewards in Tamixhagam.

      Share    Print



    You must be logged in to post comments

Recent Posts





     

Rayilu...

Muthirai ...

Achchamundu Achcha...


Saravedi...

Paiya...

Rettaichuli...

Sasirekha Paranaya ...

Trump Card on Loca ...

Ilayaraja Composin ...


Rayilu Crew Meet ...

Asha Bhosale Inagu ...

Mahanagaram Lo Shi ...