Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Blogs Spotlight Videos Movies Cartoon Photos Submit Media Space  Feed Directory 





Profile :

I am a freelancer and researcher interested in the ancient Indian history and its impact on the current events. The Indians have been subjected to coolie-mentality that works even today. Though, they earn, they are controlled by the factors of ego, selfishness and other facts and thus they compromise, dilute or even sacrifice their religion, culture, heritage, tradition and civilization. The racial interpretation of Indian history has played havoc and I am trying to analyse it critically.

Content Created :

Blogs Posted :212
Articles Posted:1
Videos Uploaded :0
Albums Uploaded :0

Member Since: 21-10-2007
Palaniappan has no friends.
Previous
    
Next
How long this type of anti-Hindu tirade could continue under the guise of rhetoric poetics?
Published on August 26th, 2008 In Uncategorized |  Views 148

Why this anti-Hindu tirade?

How long this type of anti-Hindu tirade could continue under the guise of rhetoric poetics?The following has been the speech of a sworn (as per the provisions of the Constitution of India) TN State Minister made on 29-04-2008 at Saidapet during a function to facilitate Bharathidasan.

“பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாள்
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பி யவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அழகு நடை யில் சொன்ன அந்த வார்த் தைகளைத்தான் புரட்சிக் கவிஞர் சொன்னார். ஸ்ரீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று புரட்சிக் கவிஞர் சொன்னார் (கைதட்டல்). உணர்ச்சியோடு சொன்னார்." Thus, he gave explanation to it. How long  the poetics of rhetoric could continue?

As none objected to such rhetoric, it is continued unabated. The onlookers hear and disburse with surprise and digust.

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு உற்ற சகோதரராக அவரின்
நல்லாட்சிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர்

பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன் பாராட்டுரை

 

சென்னை, மே 27- தமிழர்களின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உற்றத் துணையாக இருந்து கலைஞரின் நல்லாட்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் என்று பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் புகழ்ந்து கூறினார்.
சென்னை - சைதையில் 29-4-2008 அன்று நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:
கலைஞர் அவர்களுக்கு உற்ற சகோதரர்
புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களின் 118-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் இங்கு சிறப்பாகப் பாராட்டப்பட்டிருக்கிற வணக்கத்திற்குரிய சென்னை மாநகரத்தினுடைய மேயர் எனது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய மா. சுப்பிரமணியன் அவர்களே, இந்த சமுதாயத்தை மனித சமுதாயமாக ஆக்கவேண்டும் என்பதற்காக எஞ்சியிருக்கின்ற காலங்களிலும் மனிதர்கள் மனிதர்களாக நடமாடுவதற்கு, இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டு மல்லாமல், எதிர்த்துப் போராடி வெற்றிபெறுவதற்கு ஒரு வீரம் வேண்டும் என்பதற் காக மிகச் சிறந்த பகுத்தறி வாளர் நமது இனத்தின் தலைவர் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உற்றச் சகோதரனாக இருந்து இன் றைக்கு நடக்கின்ற ஒரு நல்லாட்சிக்கு வழிகாட்டியாக கிரியா ஊக்கியாக இருக்கக் கூடிய மானமிகு திராவிட சமுதாயத்தினுடைய தலைவர் மரியாதைக்குரிய தமிழர் தலைவர் அவர்களே, பெரி யோர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே உங்கள் அத்துணை பேருக்கும் என்னு டைய பணிவான வணக்கத் தினை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில்
இன்றைக்கு நடைபெறுகிற புரட்சிக் கவிஞர் பாரதிதாச னுடைய பிறந்தநாள் விழாவில் என்னைப்போன்ற இன்னும் சொல்லப்போனால், சென்னை மாநகர மேயராக பொறுப் பேற்றிருக்கக் கூடிய அவர்கள் சாதாரண சமுதாயத்தில் மீன் பிடிக்கக் கூடிய சமுதாயத்தில் பிறந்தவர். இதைவிட தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களும் மிகக் கேவலமான நிலையில் இருந் ததை மறந்துவிடக் கூடாது.
மா. சுப்பிரமணியன் அவர் கள் பிறந்த சமூதாயத்திற்கு அக்கிரகாரத்தில் பிறக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அக்கிரகாரம் அருகாமையில் இல்லாமல் இருந்தது. ஆனால், சேரிப்புரத்திலே இருந்த தாழ்த் தப்பட்ட தலித் மக்களுக்கு அருகாமையில், அக்கிரகாரம் இருந்தும்கூட நாய்கள் போனது, பன்றிகள் போனது, எருமை மாடுகள் போனது. ஆனால் தலித் சமுதாய மக் களுக்கு வாய்ப்பில்லாமல் தடை செய்யப்பட்டிருந்தது.
சிரத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர் பணியாற்றுகிறார்
அப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்த நம்மைத்தான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளைச் சொல்லி கருத்துக்களை சொல்லி நமக் குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக அவரே போராடி, உரிமைகளைப் பெற்றுத் தந்த காரணத்தால் தான் எந்த தலைவர்களுடைய வழி காட்டுதலில் ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார் களோ, நம்மை எல்லாம் உருவாக்குவதற்கு சிரத்தை எடுத்துக் கொண்டு உருவாக்கி இன்றைக்கு நம்மைப் பெருமைப்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.
தி.க., தி.மு.க., பாராட்டினால்தான்
யார் பாராட்டுகிறார்களோ, இல்லையோ திராவிடர் கழகமும், திராவிட முன்னேற் றக் கழகத்தைச் சார்ந்த தலை வர்களும் பாராட்டும்பொழுது தான் உண்மையிலேயே நாம் பெருமைப்படுகின்றோம் என்பதை நான் மனமார தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் புலவர்கள் தோன்றினார்கள். கம்பன் இருந் தான். பார்ப்பன சமூகத்தில் பிறந்த பாரதி இருந்தான்.
புரட்சிக் கருத்துக்களை சொன்னவர்
ஆனால், கண்ணதாசன் போன்றவர்கள் நம்முடைய தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்கள்கூட தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக்கூடிய அள விற்கு கட்டுக் கதைகளும், புராணக்கதைகளும், மவுடீகத் தன்மைகளும் இருந்த அந்த நூல்களைப் பார்த்து, அந்த மொழியியைக் கூட தலைவர் பெரியார் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்கள்.
ஆனால் தந்தை பெரியார் அவர்களே தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு புரட்சிக் கருத்து களைச் சொன்னவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எத்தனைப் புலவர்கள் தோன்றினாலும்கூட
எத்தனை புலவர்கள் தோன் றினாலும் கூட, எத்தனைக் கருத்துகளைச் சொல்லக்கூடிய கவிகள் தோன்றினாலும்கூட, தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அந்த பகுத்தறிவுக் கருத்துக்களை பாரதிதாசன் சொன்ன காரணத்தால்தான் பாரதிதாசனை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.
பெரியாரின் கருத்துகளை கவிதையில் காட்டியவர்
எத்தனையோ புலவர்கள் இருக்கிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களை இயற்றிய வர்கள் இருக்கிறார்கள். இராம லிங்க அடிகள் போன்றவர்கள் சமதர்ம கருத்துக்களை சொல் லியிருந்தால்கூட, தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அந்தப் புரட்சிக் கருத்துகளை, சுயமரியாதைக் கருத்துகளை தன்னுடைய கவிதையிலே காட்டிய காரணத்தால்தான் பாரதி தாசனை இன்றைக்கும் பாராட்டுகிறோம். புரட்சிக் கவிஞர் கருத்துகள்
இன்றைக்கு அருள்மொழி சொன்னதைப்போல் நூலைப் படி என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். கல்வியை கற்கிற பொழுது கூட உனக்குத் தெரியாததைக் கற்க முற்படுகிறாய். வரையறைக்கு உட்பட்டு கற்கிற நேரத்தில் தான் நீ மனிதாக இருக்க முடியும் என்று சுட்டிக்காட் டியிருக்கிறார்.
தமிழ் புலவனாக இருக்கின்ற காரணத்தால்
புரட்சிக் கவிஞர் அவர்கள் சீர்திருத்தக் கருத்துகளை எடுத் துச் சொல்லியிருக்கின்றார். உழைக்கின்ற உழைப்பாளர் களைப் பற்றி எடுத்துச்சொல்லி யிருக்கின்றார். அரசனுடைய பெண்ணையும், புலவரையும் காட்டுகிற நேரத்தில் அவர் களுக்குள்ளே காதல் ஏற்பட்டு, அதை ஏற்றுக் கொள்ளாத அரசன் அவர்களை பலிபீடத் தில் நிறுத்துகிறபொழுது கடைசியாகச் சொல்லுவான்.
தமிழ்ப் புலவனாக இருக்கின்ற காரணத்தால்
இந்த நாட்டிற்கு ஒரு குடி யரசைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற அந்த புலவன் சொல்லுவான், நான் அழகனாக இருக்கிறேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ள வில்லை. நான் தமிழ்ப்புல வனாக இருக்கின்ற காரணத் தால் ஏற்றுக்கொண்டார். என்னை பலிபீடத்தில் நிறுத்தி யிருக்கின்றீர்கள். இது எனக்கு இழுக்கு அல்ல. என்னுடைய மொழிக்கு இழுக்கு என்று சொன்னார்.
அன்றைக்கு இருந்த அர சியல் வித்தகர் வழிகாட்டி கள்கூட புரட்சிக் கவிஞர் அவர்களுடைய கவிதைகளைத் தான் பயன்படுத்திக் கொண் டார்கள். நாவலர் அவர்கள் அடிக்கடி புரட்சிக் கவிஞர் அவர்களுடைய பாடல்களைச் சொல்வதாக அருள்மொழி அவர்கள் சொன்னார்கள்.
மன்னை அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் எங்கள் ஊரில் இருந்த மன்னை அவர்கள்கூட ஒவ் வொரு மேடையில் ஏறுகிற நேரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய கருத்துகளைத்தான் சொல்லு வார். அப்படிப்பட்ட கருத்துக்கு உரியவர் நம்மை வழிநடத்தக் கூடியவராக இருக் கின்றவர். உழைப்பாளிகளைப் பற்றி, தொழிலாளிகளைப்பற்றி பேசுகிறபொழுது அவர் களுக்கு உரிமைக் கேட்டு கிடைக்காத நேரத்தில் அவர் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பதை ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டால், ஓடப்பர் உயரப்பர்
எல்லாம் மாறி ஒப்பப்பராகி விடுவார் உணரப்பாநீ! என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் பாடினார்.
பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாள்
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பி யவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அழகு நடை யில் சொன்ன அந்த வார்த் தைகளைத்தான் புரட்சிக் கவிஞர் சொன்னார். ஸ்ரீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று புரட்சிக் கவிஞர் சொன்னார் (கைதட்டல்).

உணர்ச்சியோடு சொன்னார். அடிமைப்பட்டி ருக்கிறோம். நாங்கள் சிலை களை உருவாக்குகிறவர்கள் - நாங்கள். ஆலயத்தை உருவாக் குகிறவர்கள் நாங்கள். எங் களுக்கு உரிமை இல்லை யென்று வெளியில் பேசினான்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்
அய்யா நம்முடைய தலை வர் முதல்வர் கலைஞர் அவர் கள் அய்ந்தாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது நம்முடைய தமிழர் தலைவர் விரும்புகிறபடி அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராக்கப்படுவர் என்ற சட் டத்தை உருவாக்கி, தெருக் கோடியிலிருந்த தாழ்த்தப் பட்ட மக்களை இன்றைக்கு அர்ச்சகராக ஆக்கியிருக் கிறார்கள் என்றால், இப்படிப் பட்ட சாதனைகள் நிகழுகிற காலத்தில் நாம் வாழுகிறோம்.
முதல்வர் கலைஞர் அவர் கள் காலத்தில் வாழுகிறோம். அய்யா தமிழர் தலைவர் அவர் களுடைய காலத்தில் வாழு கிறோம். அதைவிட நமக்குப் பெருமை அவர்கள் பாராட் டக்கூடிய அளவிற்கு நாம் வாழுகிறோம் என்றால் இதை விட வேறு பெருமை நமக்கு இல்லை. உங்கள் எண்ணம் போல் நடப்போம்
அய்யா தமிழர் தலைவர் அவர்களே, உங்கள் எண்ணம் போல் நாங்கள் நடப்போம். பணி செய்வோம் என்பதை கூறி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்ததற்கு மேயர் அவர் களைப் பாராட்ட வாய்ப்புக் கொடுத்ததற்கும் அத்தனை பேருக்கும் நன்றியைக்கூறி, ஆசிரியர் அவர்களை வணங்கி விடைபெறுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் உ. மதிவாணன் உரையாற்றினார்.

  Share      Print


One Response to “How long this type of anti-Hindu tirade could continue under the guise of rhetoric poetics?”
    1. Ezhavendan Says:
    Posted on September 11th, 2008

    This only proves to what extent, the Tamils have been cheated and misguided by the DK propagandists.

    ” ஸ்ரீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று புரட்சிக் கவிஞர் சொன்னார்” - as these spineless, self-respectless Tamil go on repeat the nonsense, it is better these creatures are blasted off.

      Share    Print



    You must be logged in to post comments

Recent Posts





     

A AA E EE...

Thenavattu...

Thee...


Poo...

Kadhalna Summa ill...

Nadigai...

Thiruvanamalai Tra ...

Sorry Bhai Star Ta ...

Maruti Suzuki A st ...


Press Photo Awards ...

Sun Network Launch ...

Rab Ne Bana Di Jod ...
     


About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ