Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Blogs Spotlight Videos Movies Cartoon Photos Submit Media Space  Feed Directory 



Profile :

I am a freelancer and researcher interested in the ancient Indian history and its impact on the current events. The Indians have been subjected to coolie-mentality that works even today. Though, they earn, they are controlled by the factors of ego, selfishness and other facts and thus they compromise, dilute or even sacrifice their religion, culture, heritage, tradition and civilization. The racial interpretation of Indian history has played havoc and I am trying to analyse it critically.

Content Created :

Blogs Posted :293
Articles Posted:1
Videos Uploaded :0
Albums Uploaded :0

Member Since: 21-10-2007
Palaniappan has no friends.
Previous
    
Next
Anti-Brahminism or facts: When the mantap is demolished at Kanchipuram
Published on August 3rd, 2008 In Uncategorized |  Views 250

When a mantap is demolished, the DK is keeping quite, but it rises the old issues of Brahmin-domination etc., in the Kanchipuram context.

Is it a diverting tactics ior otherwise, people have to verify.

“பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையோ!"

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் உயரிய கருத்துள்ள நம் நாட்டில் மனிதரிடையே ஏற்றத் தாழ்வை உண்டாக்க பார்ப் பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சிதான் ஜாதிகள். அந்த ஜாதிகளை கடவுளே உண்டாக் கினார் என்று கதையளந்து விட்டனர். அந்தக் கடவுளும் காக்கும் கடவுளான திருமா லின் அவதாரமாம். அப்படிப் பட்ட திருமாலின் கோயில் களில் குறிப்பாக காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள், மணவாள மாமுனிகள் சன் னதிகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

கோயில்களில் பார்ப்பனரல்லாதார்க்கு அநீதி

பார்ப்பனரல்லாத வைண வர்களுக்கு பின்வாசல் வழி யாக தீர்த்த சடாரி பிரசாதம் வழங்கப்படுகிறது. பொதுவாக பக்தர்கள் அனைவரையும் உட்கார வைத்துதான் பிரசா தம் தர வேண்டும். ஆனால், பார்ப்பனரல்லாதாரை நிற்க வைத்துத்தான். அதுவும் செருப்பு விடும் இடத்தில்தான் தீர்த்தசடாரி பிரசாதம் தரப்படுகிறது. இதுவும் ஒரு வகை தீண்டாமைக் கொடுமை தான் என்று திருக்கச்சி நம்பி திருமாலடியார்கள் சேவை சங்கம் கூறுகிறது.

அரசு ஆணைகள் மதிக்கப்படவில்லை

தீர்த்தசடாரி பிரசாத விநியோகத்தில் சேவார்த்தி களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை ந.க. எண் 4822/03/ஆ3/நாள்: 14.10.2003 அன்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இன்றுவரை பார்ப்பனரல் லாதாரை நிற்க வைத்துத்தான் பிரசாதம் வழங்கப்படுகிறது.

கோயில் நுழைவுச் சட்டம் ஒஒ11 - 1939 முதலிய சட்டங் கள் அப்பட்டமாக மீறப் படுகின்றன. அறநிலையத்துறை யின் பல்வேறு சட்டங்கள் இங்கு செல்லரித்தே கிடக்கின்றன.

ஒரு குலத்துக்கொரு நீதி

`யாருங்க இப்ப ஜாதி பார்க்கிறாங்க என்று கூறும் பார்ப்பனர்கள் - கோயிலில் பார்ப்பனரல்லாதார்க்கு இழைக்கப்படும் அநீதி கேவல மானதல்லவா? இதைத்தான் தந்தை பெரியார் - மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றார். நூற்றாண்டு காணும் நாயகர் பேரறிஞர் அண்ணா அவர் கள் `பேச நா இரண்டுடை யாய் போற்றி என்றார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்

அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது - ஜாதி ஒழிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். பெரியாராட்சி நடத்திக் கொண்டிருக்கும் மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழர் தலைவரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து ஜாதி யினரையும் அர்ச்சகராக்க சட்டம் செய்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் பயிற்சி முடிக்கும் தறு வாயில் உள்ளனர். சமூக நீதி அடிப்படையில் அனைத்துக் கோயில்களிலும் அர்ச்ச கர்களை நியமித்தால் யதோத் தகாரி கோயில் போன்று மனிதரில் வேற்றுமைகள் காட் டும் ஏராளமான கோயில் களில் ஜாதி வேற்றுமைகள், தீண்டாமைக் கொடுமைகள் களையப்படும் என்பது உறுதி.

ஜாதி வேற்றுமை காட்டும் கோயில்கள்

பார்ப்பனர்கள், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயி லுக்கு வரும் நிர்வாக அதி காரிகள்கூட ஸ்மார்த்தா, மாத்வா என்னும் பார்ப் பனர்களே வர வேண்டும். பிறர் வரக்கூடாது என்கின்றனர். கோயிலையே ளுஉநஅந கூநஅயீடந என்னும் தனிப்பட்டியலுக்குள் கொண்டுவந்து பிற பார்ப்பன ஜாதியினர்கூட நிர்வாக அதிகாரியாக வர முடியாத அளவுக்கு அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தை (1952 ஹஉவ) வளைத்துக் கொண்டனர். வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வரும் நிர்வாக அதிகாரியே காமாட்சியம்மன் கோயிலுக்கும் கூடுதல் பொறுப்பைக் கவனிக்கிறார். தனியாக ஒரு நிர்வாக அதி காரியை (நு.டீ) காமாட்சியம் மன் கோயிலுக்குப் போட லாம். ஆனால், தனியாக நிர் வாக அதிகாரியை போடாமல் ஸ்கீம் டெம்பிளில் வராத காமாட்சியம்மன் கோயிலுக்கு பார்ப்பனரல்லாத நிர்வாக அதிகாரியைப் போட வேண் டிவருமே என்பதற்காகவே பல காலமாக வரதராஜப் பெரு மாள் கோயில் நிர்வாக அதி காரியையே காமாட்சியம்மன் கோயிலுக்கும் கூடுதல் பொறுப்பை கவனிக்கச் சொல்கின்றனர். இதனால் பார்ப்பனரல்லாதவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மடத்தின் அடிமையாக நிர்வாக அலுவலர்

காமாட்சியம்மன் கோயில் காஞ்சி சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகாரி ஓர் அடிமையாகவே செயல்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் காமாட்சியம் மன் கோயில் அதிகாரியை மடம் நினைத்தால் பொறுப்பி லிருந்து நீக்கிவிட அதிகாரம் உண்டு என்னும் நிலையே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை இதற்கு விடிவு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை தனித்தனி நிர்வாக அலுவலர்

வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஏராளமாக நில புலன்கள் சொத்து பத்து ஏராளம். காமாட்சியம்மன் கோயிலுக்கும் நிலபுலன்கள், சொத்து பத்து ஏராளம். இவையெல்லாம் பார்ப் பனரல்லாத தமிழர்கள் கோயி லுக்கென்று எழுதி வைத்த கொட்டிக் கொடுத்த கொடை கள். ஏராளமான சொத்துக்கள் கொண்ட இரு கோயில் களுக்கும், தனித்தனி அதி காரியை நியமித்தால் நிர் வாகம் ஒழுங்காக இருக்கும். ஆனால் ஒரே அதிகாரி இரு கோயில்களுக்கும் பார்ப்பான் பண்ணையம் கேட்பா ரில்லை! என்ற நிலையால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக கோயில் சொத் துக்கள் சுரண்டப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஸ்மார்த்தா, மாத்வா நிலையில் வரதராஜப்பெருமாள் கோயி லுக்கு நிலையான அதிகாரி யாரும் இல்லை. உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவரே கூடுதல் பொறுப்பாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நிர்வாக அலுவலராக உள்ளார். உதவி ஆணையர் நிலையிலும் ஸ்மார்த்தா, மாத்வா பார்ப்பனர்கள் இல்லையென்றால், யார் இப் பொறுப்புகளை கவனிப்பார்?

புரட்சிக் கவிஞர்

`சைவப் பார்ப்பான் வைண வப் பார்ப்பான், வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப் பான், எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான் என்று பாடி னாரே புரட்சிக் கவிஞர் - அதைப்போலத்தான் தமிழர் சொத்துகளும் உரிமைகளும் மறுக்கப்பட்டு சுரண்டப்படு கின்றன.

சுரண்டல்காரர்கள்

வரதராஜப் பெருமாள் கோயிலின் உபகோயிலான தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் கடை சியாக 1984-இல்தான் திறக்கப் பட்டது. அப்போதே மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுமார் ரூ.17,000/- வசூலானது. தற் போது நாளொன்றுக்கு ரூ.2000/- அளவிற்கு தட்டில் வசூலாகிறது.

பணவரவு அதிகம் உள்ள கோயில் என்பதால் கோயிலில் பூஜை செய்யும் பார்ப்பனர்கள் - தங்களுக்கே கோயில் சொந்தம் என்றும், தாங்கள் தான் பரம்பரை டிரஸ்டி என்றும் கூறி நீதிமன்றம் சென்று தங்களுக்குச் சாதக மாக தீர்ப்பும் பெற்றுள்ளனர். ஆனால், இந்து சமய அற நிலையத் துறைக்குக் கீழுள்ள கோயிலின் வழக்கு உரி மையியல் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்றும், இணை ஆணையர் நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்பட வேண் டும் என்றும் பக்தர்கள் கூறு கின்றனர்.

திறக்கப்படாத உண்டியல்

பார்ப்பனர் ஆதிக்கத் தின்கீழ் தனியார் சொந்தம் கொண்டாடும் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் 1984-க்குப் பிறகு இன்றுவரை திறக்கப் படாமலேயே உள்ளது. இதுபற்றி பார்ப்பன ஏடான தினமலரில் 7.3.2007-இல் பக் 14-இல் `நிரம்பி வழியும் ஆஞ்சநேயர் கோயில் உண்டி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

மாற்றம் வரும்

மேற்கண்ட செய்திகளை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கொண்டு வரப்பட்டதோ அந்த நோக் கத்தை நிறைவேற்ற, மக்கள் சொத்து மக்களுக்கே பயன் பட ஜாதி பேதமற்ற நிர்வாகம் கோயில்களில் நடைபெற, கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடுக்கும் என்று நம்புவோமாக!

- பா. கதிரவன்,
‘விடுதலை" செய்தியாளர்
காஞ்சிபுரம்

  Share      Print


One Response to “Anti-Brahminism or facts: When the mantap is demolished at Kanchipuram”
    1. brahmallahchrist Says:
    Posted on August 4th, 2008

    You need not worry about DK-arivujivis (super-intelligential) who blabber like anything.
    These fellows have no sense of anything.

    They cannot be compared to any idiotic character like Nero who supposed to be playing fiddle while, Rome was burning etc.

    As pointed out rightly, Karunanidhi and son would be going on distributing TVs. When these Islamic terrorists bomb and kill people;

    Kanimozhi would be using school children as shield to hobnob with LTTE agent Gasper conducting shows;

    When bulldozers pull down beautiful mantaps with carved sculptures are pulled down, songs would be composed;

    When Tamil women die, starve and suffer with price rise etc., these people would be sitting and enjoying the kulukkal of Namitha, half-naked Sreya and others ( I forgot the names of others – that came with Kamal Hassan…………).

      Share    Print



    You must be logged in to post comments

Recent Posts





     

Rayilu...

Muthirai ...

Achchamundu Achcha...


Saravedi...

Paiya...

Rettaichuli...

Sasirekha Paranaya ...

Trump Card on Loca ...

Ilayaraja Composin ...


Rayilu Crew Meet ...

Asha Bhosale Inagu ...

Mahanagaram Lo Shi ...
     


About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ